» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ராஜேஷ் தாஸை கைது செய்யக் கோரி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திங்கள் 8, மார்ச் 2021 3:53:52 PM (IST)பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்யக் கோரி தூத்துக்குடியில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண் காவலர்  உயர் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிஜிபி ராஜேஸ் தாஸ் மற்றும் இதுகுறித்து புகார் கொடுக்க விடாமல் தடுத்த செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பூமயில் தலைமை வகித்தார். இதில், மாவடட தலைவர் விஜயலட்சுமி, மாவட்ட துணைச் செயலாளர் கலைசெல்வி, மற்றும் நிர்வாகிகள் உலகமணி, செல்வி, கவிதா, ஜெயலலிதா உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir Products


Black Forest Cakes

Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory