» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாய் செல்போன் தர மறுத்ததால் மாணவன் தற்கொலை

செவ்வாய் 23, பிப்ரவரி 2021 3:17:22 PM (IST)

விளாத்திகுளம் அருகே தாய் செல்போன் தர மறுத்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிமுருகன். இவரது மனைவி ஜோதிமணி. இந்த தம்பதியருக்கு மதன் (16), பாலகுரு (13) என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் மதன் 9ஆம் வகுப்பும்,  பாலகுரு 6ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தங்களது பெற்றோர்களின் செல்போன்களை வைத்து விளையாடுவது வழக்கம். 
 
இந்நிலையில் நேற்று காலையில் 9ஆம் வகுப்பு படிக்கும் மதன் பள்ளிக்கு சென்று விட்டார். 6ஆம் வகுப்பு படிக்கும் பாலகுரு வீட்டில் இருந்துள்ளார். தாய் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு கிளம்பியுள்ளார். அப்போது பாலகுரு தனது தாயிடம் உடன் வருவதாக கூறிய நிலையில், தாய் ஜோதி மணி வீட்டிலேயே இருக்கும் படி கூறினாராம். அதற்கு பாலகுரு வீட்டில் இருக்க வேண்டும் என்றால் செல்போனை தரும்படி கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஜோதிமணி தனியாக விட்டுவிட்டுச் சென்றுள்ளார். 

திருமண நிகழ்ச்சி முடிந்து ஜோதிமணி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பாலகுரு தூக்கில் தொங்கிய படி உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து விளாத்திகுளம் போலீசார் விரைந்து வந்து சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்திய வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thalir Products

Nalam PasumaiyagamBlack Forest CakesThoothukudi Business Directory