» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சத்துணவு பெண் ஊழியர்கள் சாலை மறியல்: 600க்கும் மேற்பட்ட பெண்கள் கைது!!

செவ்வாய் 23, பிப்ரவரி 2021 2:27:43 PM (IST)தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாநில‌ முடிவின்படி  5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சத்துணவு பெண் ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி பாளை ரோட்டில் நடந்த மறியல் போராட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் பாக்கியசீலி தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் ஆனந்தன், செல்வம், வேல்முருகன், பெருமாள், பொன்னு, பாஸ்கர், வைஜெயந்திமாலா, மரியனேசன், ரத்னாவதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சத்துணவு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் பொன்சேகர்,மாநில துணைத் தலைவர் தமிழரசன் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட தலைவர் செந்தூர் ராஜன், மாவட்ட துணைத் தலைவர் அண்ணாமலை பரமசிவன், ஆகியோர் வாழ்த்துறை வழங்கினர்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் என் வெங்கடேசன் போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார்.

சத்துணவு ஊழியர்களை முழு நேர ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகப்புடன் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட 600 க்கும் மேற்பட்ட சத்துணவு பெண் ஊழியர்களை காவல்ரதுறைனர் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கயிறு கட்டி இழுத்து கைது செய்ய முற்பட்டதால் போராட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory