» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண்ணுக்கு வரதட்சனை கொடுமை: கணவர் உட்பட 3பேர் மீது வழக்குப் பதிவு!!

செவ்வாய் 23, பிப்ரவரி 2021 11:43:16 AM (IST)

தூத்துக்குடியில் கூடுதல் வரதட்சனை கேட்டு மனைவியை துன்புறுத்தியதாக கணவர் உட்பட 3பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி எம் சவேரியார்புரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் சாம் ஆசீர் ரூபன். இவரது மனைவி மோனிஷா (26), இந்த தம்பதியருக்கு கடந்த 2018ல் திருமணம் நடந்துள்ளது. ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது பெண் வீட்டார் 15 பவுன் நகையும் ரூ.1லட்சம் ரொக்கமும் வரதட்சனையாக கொடுத்தார்களாம். 

இந்நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு சாம் ஆசீர் ரூபன், மனைவியை துன்புறுத்தினாராம். இதற்கு அவரது தந்தை ஜான்சன், தாய் ஜாஸ்மின் ஆகியோர் உடந்தையாக இருந்தார்களாம். இதுகுறித்து மோனிஷா தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சாம் ஆசீர் ரூபன் மற்றும் அவரது பெற்றோர் மீது சப் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

தமிழன்Feb 27, 2021 - 05:00:27 PM | Posted IP 162.1*****

விடவே கூடாது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Thalir Products


Black Forest Cakes


Thoothukudi Business Directory