» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் லாரி டயர்கள் திருட்டு : 2பேர் கைது

செவ்வாய் 23, பிப்ரவரி 2021 11:35:03 AM (IST)

தூத்துக்குடியில் பெட்ரோல் பங்கில் லாரி டயர்களை திருட முயன்றதாக 2பேரை போலீசார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி எட்டையபுரம் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்த மூன்று லாரி டயர்களை 2பேர் திருட முயன்றுள்ளனர். இதைப்பார்த்த பல்க் ஊழியர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் சேர்ந்து அவர்கள் இருவரையும் பிடித்து சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி பெரியசாமி நகரைச் சேர்ந்த ஆறுமுக நயினார் மகன் ஆறுமுகசாமி (34), தாளமுத்துநகர் இந்திரா நகரைச் சேர்ந்த சந்தனராஜ் மகன் ராஜேஸ்வரன் (26) என்பதும், இருவரும் லாரி டயர்கள் திருட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2பேர் மீதும் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Thalir ProductsNalam Pasumaiyagam
Thoothukudi Business Directory