» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஓடும் பஸ்சில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் : 4பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!!

செவ்வாய் 23, பிப்ரவரி 2021 11:14:35 AM (IST)

தூத்துக்குடி அருகே ஓடும் பஸ்சில் சட்டக் கல்லூரி மாணவர்கள் இருவர் மீது இரும்பு கம்பியால் கொலைவெறி தாக்குதல் நடத்திய 4பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பைச் சேர்ந்தவர் ஆனந்தப்பன் மகன் வசந்தகுமார் (21). இவர் நெல்லையில் உள்ள சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். தூத்துக்குடி சில்வர்புரத்தைச் சேர்ந்தவர் குருநாதன் மகன் சாம் ஜெபதுரை (19). இவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்று தனியார் பேருந்தில் பேருந்தில் தூத்துக்குடி வந்து கொண்டிருந்தனர். 

அந்த பேருந்து மாலை 5மணியளவில் புதுக்கோட்டை யூனியன் அலுவலகம் அருகே வந்தபோது 4பேர் கொண்ட கும்பல் பஸ்சை வழிமறித்து ஏறியுள்ளர். பின்னர் அந்த கும்பல் வசந்தகுமாரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதனை தடுக்க முயன்ற சாம் ஜெபதுரையையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். 

ஆனால் போலீசார் வருவதற்குள் மாணவர்களை தாக்கிய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது. இதையடுத்து பலத்த காயம் அடைந்த இருவரையும் போலீசார் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி பொன்னரசு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையில் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் எதிரொலியாக கூலிப்படை மூலம் அவர்கள் 2பேரும் தாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. ஓடும் பேருந்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Black Forest Cakes


Thalir Products

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory