» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

செவ்வாய் 23, பிப்ரவரி 2021 11:03:57 AM (IST)

தூத்துக்குடி அருகே திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்தது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி அருகேயுள்ள தருவைகுளம் சக்கம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான்பீட்டர். இவரது மனைவி பாண்டிமீனா (20). இந்த தம்பதியருக்கு, கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. ஜான் பீட்டருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாம். 

இந்த விபரம் தெரியவரவே பாண்டிமீனா, கணவரை பிரிந்து தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டாராம். இதனால் மனவேதனையில் இருந்து வந்த அவர் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்காெலை செய்து கொண்டார். இதுகுறித்து தருவைகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes




Thalir Products

Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory