» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே பைக் மீது லாரி மோதி ஒருவர் பலி : மனைவி - மகள் படுகாயம்

செவ்வாய் 23, பிப்ரவரி 2021 10:56:58 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மீது லாரி மோதியதில் ஒருவர்  உயிரிழந்தார். அவரது மனைவியும் மகளும் காயம் அடைந்தனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு சவுந்திர பாண்டியனார் தெருவைச் சேர்ந்தவர் ஆண்டி மகன் கோட்டாலம் (60), இவர் தனது மனைவி பேச்சியம்மாள் (55), மகள் சரோஜா (25) ஆகியோருடன் பைக்கில் தூத்துக்குடி வந்துவிட்டு மீண்டும் உமரிக்காட்டிற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 

முத்தையாபுரம் மெயின் ரோட்டில் பல்க் அருகே சென்றபோது எதிரே வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் தந்தை மகள் உட்பட மூவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கோட்டாலம் உயிரிழந்தார். அவரது மனைவி மற்றும் மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Thalir Products




Black Forest Cakes




Thoothukudi Business Directory