» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஷிப்பிங் கம்பெனி ஊழியர் கடத்தல் : லாரி டிரைவர் கைது - மேலும் 4பேருக்கு போலீஸ் வலை
செவ்வாய் 23, பிப்ரவரி 2021 10:34:11 AM (IST)
தூத்துக்குடியில் அரிவாளால் மிரட்டி ஷிப்பிங் கம்பெனி சூப்பர்வைசரை கடத்தியதாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4பேரை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி நேதாஜி நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் கைலாசம் மகன் குமாரவேல் (42). இவர் தூத்துக்குடி துறைமுகம் - மதுரை பை பாஸ ரோட்டில் உள்ள தனியார் ஷிப்பிங் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலைபார்த்து வருகிறார். கப்பலில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களை லாரியில் கொண்டு செல்வதற்கான டோக்கன் வழங்கும் பணி செய்து வருகிறார்.
இந்நிலையில், தென்காசி மாவட்டம் அம்பாசமுத்துரத்தைச் சேர்ந்த காசிர்கான் மகன் அசாருதீன் (21), என்ற லாரி டிரைவருக்கு டோக்கன் கொடுக்கவில்லையாம். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை குமாரவேல் புதிய துறைமுகம் நுழைவு வாயில் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தபோது அசாருதீன் உள்ளிட்ட 5பேர் அரிவாளை காட்டி மிரட்டி அவரை காரில் கடத்திச் சென்றுவிட்டார்களாம்.
பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து புதியம்புத்தூர் விலக்கு ரோட்டில் விட்டுவிட்டு சென்றார்களாம். இதுகுறித்து குமாரவேல் தூத்துக்குடி தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கோகிலா வழக்குப் பதிந்து அசாரூதினை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் 4பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் இளம்பெண் தற்கொலை: கணவரிடம் போலீஸ் விசாரணை
சனி 10, ஏப்ரல் 2021 8:33:20 PM (IST)

முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.4.95லட்சம் அபராதம் : தூத்துக்குடி மாவட்ட எஸ்பி நடவடிக்கை !!
சனி 10, ஏப்ரல் 2021 5:03:06 PM (IST)

தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முதன்மை செயலர் ஆய்வு
சனி 10, ஏப்ரல் 2021 3:21:08 PM (IST)

பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய கூடாது : தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்
சனி 10, ஏப்ரல் 2021 11:50:05 AM (IST)

பள்ளி மாணவி உட்பட 2 இளம்பெண்கள் திடீர் மாயம்!
சனி 10, ஏப்ரல் 2021 11:33:12 AM (IST)

திருமணமான 8 மாதங்களில் இளம்பெண் தற்கொலை : தூத்துக்குடி அருகே பரிதாபம்
சனி 10, ஏப்ரல் 2021 11:20:50 AM (IST)
