» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.181 கோடி பயிர் கடன் தள்ளுபடி : அமைச்சர் கடம்பூர் ராஜூ துவங்கி வைத்தா

செவ்வாய் 23, பிப்ரவரி 2021 10:15:31 AM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் 19754 விவசாயிகளுக்கு ரூ.181 கோடி மதிப்பிலான பயிர் கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கும் பணிகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர் கடன் தள்ளுபடி சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 19754 விவசாயிகளுக்கு ரூ.181 கோடி மதிப்பிலான தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கும் பணிகளை துவக்கி வைத்தார். மேலும் வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை சேர்ந்த 196 விவசாயிகளுக்கு ரூ.1.12 கோடி மதிப்பிலான பயிர் கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கினார்.

இவ்விழாவில் அமைச்சர் பேசியதாவது:  தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு விவசாயியாக உள்ளதால் விவசாயிகளின் சிரமங்கள் அனைத்தையும் நன்கு அறிந்தவர் ஆவார். பருவம் தவறிய தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை உடனுக்குடன் சென்று எந்த ஒரு உயிரையும் இழக்காத வகையில் மீட்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதனடிப்படையில் நானும், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டோம், இருப்பினும் தொடர் மழையின் காரணமாக வெள்ளத்தாலும், பயிர் முளைத்தும் பல்வேறு சேதங்கள் விவசாயிகளுக்கு ஏற்பட்டது. 

சேதங்களை மாநில அளவிலான குழுக்களும், மத்திய அளவிலான குழுக்களும் ஆய்வு செய்தது. தமிழ்நாடு முதலமைச்சர் சேதம் அடைந்த பயிர்களுக்கு நிவாரண உதவியாகும், இழப்பீடாகவும் ரூ.1042 கோடி ஒதுக்கீடு செய்தார்கள். அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு நிவாரண உதவி, இழப்பீட்டு தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும் 17 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு கூட்டுறவு சங்களில் பெற்றுள்ள ரூ.12110 கோடி பயிர் கடனை தமிழ்நாடு முதலமைச்சர் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு மட்டுமின்றி 4வது நாளிலேயே அரசாணையும் வெளியிட்டார். மேலும் இன்று சேலம் தலைவாசல் பகுதியில் நடைபெற்ற விழாவில் பயிர் கடன் தள்ளுபடிக்காக சான்றிதழ்களையும் வழங்கி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சான்றிழ்களை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க உத்தரவிட்டார். 

அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 150 கூட்டுறவு சங்கங்களில் உள்ள 19754 விவசாயிகள் பெற்ற பயிர் கடன் ரூ.181 கோடி தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. இதில் கோவில்பட்டி சரகத்தில் மட்டும் 14350 விவசாயிகளுக்கு ரூ.96 கோடி மதிப்பில் பயிர் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்படுகிறது. வில்லிசேரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் 196 விவசாயிகளுக்கு ரூ.1.12 கோடி கோடி மதிப்பில் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது. விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்து ஒரு வார காலத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு பத்திரங்கள் வழங்கப்படுகிறது. விவசாய கடன்களை தள்ளுபடி செய்து சான்றிதழ்களை வழங்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு விவசாயிகளின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துகொள்கிறேன் என பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சத்யா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் ரவிசந்திரன், கோவில்பட்டி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், கயத்தாறு வட்டாட்சியர் பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகர், வில்லிசேரி கூட்டுறவு சங்க தலைவர் தி.செல்வம், முக்கிய பிரமுகர்கள் ஆறுமுகநயினார், ராமச்சந்திரன், அய்யாத்துரைபாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThalir ProductsNalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory