» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லையில் அதிமுக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு : மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

செவ்வாய் 23, பிப்ரவரி 2021 8:52:58 AM (IST)

நெல்லையில் பட்டப்பகலில் அ.தி.மு.க. பிரமுகரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய மர்மகும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை டவுன் வயல் தெருவைச் சேர்ந்தவர் முருகன் என்ற இந்திரா முருகன் (62). அ.தி.மு.க. பிரமுகரான இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும், அந்த பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் நெல்லை டவுன் குறுக்குத்துறை சாலையில் முருகன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மகும்பல் திடீரென்று முருகனை சுற்றிவளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர். முருகனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த முருகனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் நெல்லை டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், வழக்குப்பதிவு செய்து, அ.தி.மு.க. பிரமுகரை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிய மர்மகும்பலை சேர்ந்தவர்கள் யார்? எதற்காக அவரை வெட்டினார்கள்? என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள். தப்பி ஓடிய அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThalir ProductsBlack Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory