» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி நகர்ப்புற பகுதிகளில் நாளை மின்தடை

திங்கள் 22, பிப்ரவரி 2021 6:32:24 PM (IST)

பராமரிப்பு பணிகள் காரணமாக தூத்துக்குடி நகர்ப்புற பகுதிகளில் நாளை 23ம் தேதி செவ்வாய்க்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி நகர்புற மின்விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கர பாண்டியன் விடுத்துள்ள செய்திகுறிப்பில் "தூத்துக்குடி எட்டையாபுரம் ரோட்டில் அமைந்துள்ள நகர் உபமின் நிலையத்தில் நாளை 23.02.21 செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக  ஆண்டாள்தெரு, சத்திரம் தெரு, போல்பேட்டை, 1ம் கேட், 2ம்கேட், மட்டக்கடை, பீச்ரோடு, இனிகோ நகர் விஇ ரோடு, பாலவிநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், அண்ணா நகர் ஜெயராஜ் ரோடு, மீனாட்சிபுரம், தாமோதரநகர், எட்டயபுரம் ரோடு, தெப்பகுளம், சிவன் கோவில்தெரு, டபிள்யூஜிசி ரோடு, சந்தை ரோடு, ஜார்ஜ் ரோடு, சண்முகபுரம் ஸ்டேட் பாங்க் காலனி இஞ்ஞாசியார்புரம் எழில் நகர் அழகேசபுரம் முத்துகிருஷ்ணா புரம் குறிஞ்சி நகர், விவிடி ரோடு, போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட் நகர், முத்தம்மாள் காலனி கேடிசி நகர் ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரையில்   மின்தடை செய்யப்படும்.

மாலை மின்தடை 

தூத்துக்குடி டவுண் உபமின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் உயரழுத்த மின் பாதையில் மின் கம்பங்களை பாதுகாப்புகருதி உயர்த்தும் பணி  நாளை 23.02.2021 செவ்வாய்க் கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5:00மணி வரை நடைபெற உள்ளதால்  ராம்நகர் 4, 5வது தெரு, கேடிசி டிப்போ ரோடு, எட்டையபுரம் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில்  மின் விநியோகம் இருக்காது என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products



Nalam Pasumaiyagam



Black Forest Cakes




Thoothukudi Business Directory