» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் தமிழ்ச் சாலை பெயர் பலகை திறப்பு

திங்கள் 22, பிப்ரவரி 2021 3:57:49 PM (IST)



தூத்துக்குடியில் உள்ள பாளையங்கோட்டை முதன்மை சாலை "தமிழ் சாலை” என பெயர் சூட்டப்பட்டு பெயர் பலகையை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகில் மாநகராட்சியின் பாளையங்கோட்டை முதன்மை சாலைக்கு தமிழ் சாலை பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ்,  தலைமையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், மாநகராட்சி ஆணையர் சரண்யாஅரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசியதாவது: தமிழ்நாடு அரசு தமிழ் ஆட்சிமொழி பண்பாடு மற்றும் தொல்லியல் துறையின் உயர்மட்ட கூட்டத்தில் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தின்படி மாவட்ட தலைநகரங்களில் அமைந்துள்ள முதன்மை சாலையினை "தமிழ் சாலை” என பெயர் சூட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாக அனுமதியுடன் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை மாநகராட்சி சாலையினை "தமிழ் சாலை” என பெயரிடப்பட்டு இன்று "தமிழ் சாலை” பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் "தமிழ் சாலை” என பெயர் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாநகராட்சி செயற்பொறியாளர்கள் ரெங்கநாதன், சேர்மக்கனி, நகர்நல அலுவலர் நித்யா, உதவி செயற்பொறியாளர் சரவணன், முக்கிய பிரமுகர் ஆறுமுகநயினார் மற்றும் பல்வேறு அலுவலர்கள் கலந்துகொண்டனர். 


மக்கள் கருத்து

K.ganeshanFeb 23, 2021 - 05:27:36 PM | Posted IP 162.1*****

Welcome

K.ganeshan . secretary, Thoothukudi makkal vazhvathara pathukappu sangam.Feb 23, 2021 - 05:26:26 PM | Posted IP 162.1*****

Greetings. Welcome.

சரிங்கFeb 23, 2021 - 10:49:57 AM | Posted IP 162.1*****

சாலையை ஒழுங்கா சரிபண்ணுங்க..

PETCHIMUTHUFeb 23, 2021 - 09:55:11 AM | Posted IP 162.1*****

தூத்துக்குடியில் நடக்கும் அரசு நிகழ்ச்சிக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரை அழைக்கவில்லை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரை அழைக்கவில்லை. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருக்கு இங்கே என்ன வேலை?. நொங்கை தின்னவன் போயிருவான் கூந்தலை நக்குனவன் தான் மாட்டுனான்

ப. சுகுமார்Feb 23, 2021 - 02:45:00 AM | Posted IP 108.1*****

வாழ்த்துக்கள்.

ப. சுகுமார்Feb 23, 2021 - 02:44:39 AM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products



Nalam Pasumaiyagam



Black Forest Cakes




Thoothukudi Business Directory