» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது ஆட்டோ மோதி ஒருவர் பலி: டிரைவர் கைது

திங்கள் 22, பிப்ரவரி 2021 11:08:11 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மீது ஆட்டோ மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள வடக்கு ஆவாரங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னமுத்து மகன் வேதமானிக்கம் (55). இவர் நேற்று இரவு பைக்கில், குறுக்குச்சாலையில் இருந்து ஓட்டப்பிடாரம் நோக்கிச் சென்று கொண்ருந்தார். கவர்னகிரி விலக்கு, எதிரே வந்த ஆட்டோ பைக் மீது மோதியது.

இவ்விபத்தில் இதில் பலத்த காயம் அடைந்த வேதமானிக்கம், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். ஆட்டோவை ஓட்டிவந்த கவர்னகிரியைச் சேர்ந்த ஆவுடையப்பன் (56) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products


Nalam Pasumaiyagam


Black Forest Cakes






Thoothukudi Business Directory