» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் திருமண ஆசைகாட்டி இளம்பெண் பலாத்காரம் : வாலிபர் மீது வழக்குப் பதிவு

ஞாயிறு 21, பிப்ரவரி 2021 11:56:49 AM (IST)

தூத்துக்குடியில் திருமண ஆசை காட்டி பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி, ஆரோக்கிய புரத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் அற்புதராஜ் என்கிற அப்பாச்சி (30). பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். இவர் 29 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். மேலும் திருமண ஆசை காட்டி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண் அற்புதராஜின் வீட்டிற்கு சென்று கேட்டபோது அவரது தாயார் ரேகா என்பவர் ரூ.20 லட்சம் கொடுத்தால் மகனை திருமணம் செய்து வைப்பதாக கூறினாராம். மேலும் தாய் - மகன் இருவரும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து அந்தப் பெண், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் அற்புதராஜ் மற்றும் அவரது தாயார் மீது  இன்ஸ்பெக்டர் வனிதா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir Products




Black Forest Cakes


Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory