» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மத்திய அரசைக் கண்டித்து 22ம் தேதி ஆர்ப்பாட்டம் : கீதாஜீவன் எம்எல்ஏ அறிவிப்பு

வெள்ளி 19, பிப்ரவரி 2021 3:10:08 PM (IST)

தூத்துக்குடியில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வருகிற 22ம் தேதி திமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளா் கீதாஜீவன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை : மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு பெட்ரோல், டீசல் விலையை தாறுமாறாக உயா்த்தியுள்ளது. அதே போல இல்லத்தரசிகள் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டா் விலையையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயா்த்தியுள்ளார்கள். இதனால் விலைவாசி கடுமையாக உயா்ந்து ஏழை-எளிய நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை தாறுமாறாக உயா்த்திய மத்திய பா.ஜ.க அரசையும், அதற்கு துணைபோகும் மாநில அ.தி.மு.க அரசையும் கண்டித்தும், இந்த விலை உயா்வை திரும்பப்பெற வலியுறுத்தியும் தி.மு.கழகம் சார்பில் வருகிற 22.02.2021 அன்று மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆா்பாட்டங்கள் நடைபெறும் என தி.மு.கழக தலைவா் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்புக்கு இணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் 22.02.2021 திங்கள்கிழமை காலை 10.00 மணி அளவில்  தூத்துக்குடி – பாளைரோடு சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் எதிரில் மாவட்ட பொறுப்பாளராகிய என்னுடைய தலைமையில் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், சட்டமன்ற முன்னாள் உறுப்பினா்கள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூா் மற்றும் வார்டு, கிளைக் கழக செயலாளா்கள், பிரதிநிதிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், இளைஞரணி, மகளிரணி, மகளிர் தொண்டரணி, மாணவரணி, தொண்டரணி, மீனவரணி, இலக்கிய அணி, வழக்கறிஞா் அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளா் அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, சிறுபான்மை அணி, வா்த்தகா் அணி, பொறியாளர் அணி, நெசவாளா் அணி, தகவல்தொழில் நுட்ப அணி, மருத்துவரணி, ஆதிதிராவிடர்நலஅணி உள்ளிட்ட கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் என அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று பெருந்திரளாகக் கலந்து கொண்டு ஆா்ப்பாட்டம் வெற்றியடையச் செய்திட கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

kumarFeb 20, 2021 - 01:34:48 PM | Posted IP 162.1*****

maniyathudan koodiya gas cylinder vilai uyarthapadavillai..... sariyana seythiyai makkalidam eduthusellavum...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam
Thalir Products

Black Forest Cakes

Thoothukudi Business Directory