» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கருப்பு வைரம் என கூறி ரூ.27லட்சம் கேட்டு மோசடி : 2பேர் கைது ‍ : போலீசாருக்கு எஸ்பி பாராட்டு

வியாழன் 11, பிப்ரவரி 2021 3:35:07 PM (IST)தூத்துக்குடியில் கருப்பு வைரம் என கூறி ரூ.27 லட்சம் கேட்டு மோசடியில் ஈடுபட முயன்ற கர்நாடக  மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெங்களூர் ஜே.பி நகர் கொத்தனூர் தின்னே பகுதியை சேர்ந்தவர் சீதாராமன் மகன் அனந்தா (37) மற்றும் ஓசூர் பெஸ்தி இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் தனுராம் மகன் வெங்கடேஷ் பாபு (45) ஆகியோர் கடந்த சில நாட்களாக தங்களிடம் கருப்பு வைரம் இருப்பதாகவும், அவசரத் தேவைக்கு வாங்கி விற்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்று ரூ.27 லட்சம் பணம் கேட்டு தூத்துக்குடியில் உள்ள சில நகை வியாபாரிகள் மற்றும் தனி நபர்களிடம் கேட்டு மோசடி செய்ய முயன்றுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன், உதவி ஆய்வாளர் ரவிக்குமார், முதல் நிலைக் காவலர்கள் மாணிக்கராஜ், மகாலிங்கம், காவலர்கள் செந்தில்,  ஸ்ரீதர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு மேற்படி அனந்தா மற்றும் வெங்கடேஷ் பாபு ஆகியோரை கைது செய்து, வைத்திருந்த 425 கேரட் எடையுள்ள கருப்பு வைரம் எனப்படுவதையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தென்பாகம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை செய்தார். 

பின் கைது செய்யப்பட்டவர்களின் பின்னணி குறித்தும், கைப்பற்றப்பட்ட கருப்பு வைரத்தின் தன்மையை ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்யுமாறு தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மற்றும் தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன் ஆகியோருக்கு உத்தரவிட்டார். இது குறித்து தகவலறிந்து மோசடி வேலையில் ஈடுபடவிருந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இருவரை கைது செய்த தென்பாகம் காவல் ஆய்வாளர் தலைமையிலான தென்பாகம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThalir Products


Nalam Pasumaiyagam


Black Forest Cakes
Thoothukudi Business Directory