» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே ஏற்பாடு

வியாழன் 11, பிப்ரவரி 2021 8:18:45 AM (IST)

தை அமாவாசையை முன்னிட்டு மதுரை - ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. 

இதன்படி வண்டி எண் 06091 மதுரை - ராமேஸ்வரம் விரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து புதன்கிழமை (10.02.2021) இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.00 மணிக்கு ராமேஸ்வரம் சென்று சேரும். மற்றொரு சிறப்பு ரயில் வண்டி எண் 06097 மதுரை ராமேஸ்வரம் விரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து வியாழக்கிழமை (11.02.2021) அன்று காலை 06.45 மணிக்கு புறப்பட்டு காலை 10.00 மணிக்கு ராமேஸ்வரம் சென்று சேரும். 

மறுமார்க்கத்தில் வண்டி எண் 06092 ராமேஸ்வரம் - மதுரை விரைவு சிறப்பு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து வியாழக்கிழமை (11.02.2021) காலை 10.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.15 மணிக்கு மதுரை வந்து சேரும். மற்றொரு சிறப்பு ரயிலான வண்டி எண் 06098 ராமேஸ்வரம் - மதுரை விரைவு சிறப்பு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து வியாழக்கிழமை (11.02.2021) மாலை 04.30 மணிக்கு புறப்பட்டு இரவு 07.30 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்கள் கீழ் மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், பாம்பன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம்"  என தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Thalir Products
Black Forest Cakes
Thoothukudi Business Directory