» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

ஞாயிறு 24, ஜனவரி 2021 9:09:07 AM (IST)

கயத்தாறு அருகே கருப்புகட்டி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள அய்யனார் ஊத்து கிராமம் கிணற்று தெருவை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய மகன் மொட்டைய சாமி (39). கருப்புகட்டி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு சீதாலட்சுமி (30) என்ற மனைவியும், விஜயபாலன் (12) என்ற மகனும், கார்த்திகா (6) என்ற மகளும் உள்ளனர். 

மொட்டையசாமிக்கு உடலில் வெள்ளை தேமல் நோயால் பெரும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அவர், நேற்று மதியம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் கயத்தாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். மொட்டையசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Nalam Pasumaiyagam


Thalir Products

Thoothukudi Business Directory