» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நடுக்கடலில் தத்தளித்த தூத்துக்குடி மீனவர்கள் 7 பேர் மீட்பு

ஞாயிறு 24, ஜனவரி 2021 8:34:10 AM (IST)நடுக்கடலில் தத்தளித்த தூத்துக்குடி மீனவர்கள் 7 பேரை் கடலோர காவல்படையினரால் பாதுகாப்பாக மீட்டனர்.

தூத்துக்குடியை சேர்ந்த ராஜ்பயாஸ் என்பவருக்கு சொந்தமான சிறிய ரக சரக்கு கப்பலில், தூத்துக்குடியில் இருந்து 206 மெட்ரிக் டன் ஜல்லி கற்கள் ஏற்றப்பட்டு லட்சத்தீவுகளில் உள்ள கவராட்டி பகுதிக்கு கொண்டுச் செல்லப்பட்டது. சரக்கு கப்பல் நேற்று முன்தினம் காலை கல்பெனி தீவுக்கு மேற்கே 15 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென என்ஜின் பழுதானது. 

மேலும், கப்பலுக்குள் தண்ணீர் புகுந்ததால் கப்பலில் இருந்த 7 மீனவர்களும் உடனடியாக தூத்துக்குடியில் உள்ள கப்பல் உரிமையாளர் ராஜ் பயாஸுக்கும், கடலோர காவல் படையின் தூத்துக்குடி பிரிவு கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதையெடுத்து கவராட்டி தீவு கடலோர காவல் படைக்கு, தூத்துக்குடி கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்து படகை மீட்கும் பணியில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் கொச்சியில் இருந்து சிறிய ரக விமானம் வரவழைக்கப்பட்டு பழுதான கப்பலை தேடும் பணி நடைபெற்றது. 

இதற்கிடையே கல்பெனி தீவில் இருந்து மேற்கே 31 கடல் மைல் தொலைவில் சரக்கு கப்பல் தண்ணீரில் மூழ்கும் நிலையில் இருப்பதை கடலோர காவல் படையினர் கண்டுபிடித்தனர். உடனடியாக அங்கு சென்று கப்பலில் இருந்த 7 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர். சரக்கு கப்பல் சிறிது நேரத்தில் மூழ்கிவிட்டது. மீட்கப்பட்ட மீனவர்கள் 7 பேரையும் கடலோர காவல் படையினர் கவராட்டி தீவு போலீசாரிடம் நேற்று அதிகாலை ஒப்படைத்தனர். பின்னர், அவர்கள் அனைவரும் உரிய விசாரணைக்கு பிறகு தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam
Thalir ProductsBlack Forest CakesThoothukudi Business Directory