» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிரதம மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா பயிற்சி : அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

சனி 23, ஜனவரி 2021 12:38:54 PM (IST)கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் பிரதம மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா பயிற்சி வகுப்பினை அமைச்சர்கள் கடம்பூர் செ.ராஜூ, செல்லூர் கே.ராஜூ ஆகியோர் துவக்கி வைத்தனர். 

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் தூத்துக்குடிமாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தால் கோவில்பட்டி நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி, மாவட்டதிறன் குழு கூட்டத்தின் தலைவராகிய மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தலைமையில் பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா 3.0 திட்ட துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு PMKVY 3.0 துவக்க விழாவிற்கான சான்றிதழினை மாவட்டதிறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர், ஜெ. ஏஜ்சல் விஜய நிர்மலாவிடம் வழங்கினார். 

மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி மையங்களுக்கும் சான்றிதழ் வழங்கினார். விழாவில் PMKVY Training Providers லாயல் டெக்ஸ்டைல்ஸ், கேயார் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் வெற்றிட்ரஸ்ட் மையங்களின் ஒருங்கிணைப்பாளர்களும், பயிற்சியாளர்களும் கலந்து கொண்டனர். நிறுவனங்களின் தேவைக்கேற்ப உருவாக்கப்பட்ட இத்திட்டதில் இந்தியா முழுவதும் 8.00 லட்சம் இளைஞர்களுக்கு சுமார் 948.90 கோடி செலவில் பயிற்சியளிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தொழிற் கல்வி பெற்றவர்கள், திறமைமட்டுமே உள்ள, ஆனால் அத் திறமைக்கேற்ற கல்வித் தகுதியில்லாதோர் மற்றும் எந்த ஒரு தொழிற்கல்வியும் முடிக்காத திறமையில்லாத அடிப்படைகல்விபெற்ற புதியவர்களும் (Fresher) பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ளோர்களுக்கு சிறப்புகவனம் செலுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், வருவாய் கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் முக்கிய பிரமுகர்கள், பயிற்சித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Nalam Pasumaiyagam
Thalir ProductsThoothukudi Business Directory