» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்

சனி 23, ஜனவரி 2021 12:04:41 PM (IST)

தூத்துக்குடியில் மனைவி பிரிந்து சென்றதால் மன வருத்தத்தில் வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி திரேஸ்புரம், சால்ட் காலனியைச் சேர்ந்தவர் காந்திகுமார் மகன் சதீஷ் கண்ணன் (32). இவருக்கு திருமணமாகி 6 ஆண்டுகளாகிறது. கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டாராம். இதனால் மன வேதனையில் இருந்து வந்த அவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes


Thalir Products



Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory