» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி உரக்கிடங்கு பகுதியில் அடர் காடுகள் வளர்ப்பு திட்டம்: மாநகராட்சி அனுமதி!!

வெள்ளி 22, ஜனவரி 2021 9:37:53 PM (IST)தூத்துக்குடி தருவைகுளம் உரக்கிடங்கு பகுதியில் WE CAN TRUST தொண்டு நிறுவனம் மூலம் அடர் காடுகள் அமைத்து 3 ஆண்டுகள் பராமரிக்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக தொண்டு நிறுவன இணைச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மியாவாக்கி முறையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தருவைகுளம் உரக்கிடங்கு பகுதியில் ஏறத்தாழ 15 ஏக்கா் பரப்பளவில் மியாவாக்கி முறையில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னாா்வலா்கள் உடன் இணைந்து நடவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது   WE CAN TRUST தொண்டு நிறுவனம் மூலம் மியாவாக்கி முறையில் அடர் காடுகள் அமைத்து 3 ஆண்டுகள் பராமரிக்க தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. வருகிற 24-ஆம் தேதி தருவைகுளம் உரக் கிடங்கில் வைத்து மரக்கன்று நட்டி துவக்க விழா நடைபெற  உள்ளதால் பல்வேறு தொண்டு அமைப்புகள் பங்கேற்குமாறு தெரிவித்தார்


மக்கள் கருத்து

indianJan 23, 2021 - 09:47:02 AM | Posted IP 108.1*****

Super

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir ProductsBlack Forest Cakes

Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory