» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மீன்வளக்கல்லூரியில் மீன் தீவனம் தயாரித்தல் குறித்த பயிற்சி

வெள்ளி 22, ஜனவரி 2021 5:25:36 PM (IST)தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பண்ணை சார்ந்த மீன் தீவனம் தயாரித்தல் குறித்த ஒரு நாள் உள் வளாக பயிற்சி இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கி வரும் மீன் வளர்ப்பு துறையில் "பண்ணை சார்ந்த மீன் தீவனம் தயாரித்தல்” குறித்த ஒரு நாள் உள் வளாக பயிற்சி 22.01.2021 அன்று நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 1 மகளீர் உட்பட10 பயனாளிகள்  கலந்து கொண்டு பயன் பெற்றனர். 

இப்பயிற்சியில் மீனுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், மீன் தீவனம் தயாரிக்க தேவையான தாவர மற்றும் விலங்கின மூலப்பொருட்கள் தேர்ந்தெடுத்தல், தேர்ந்தெடுத்த மூலப்பொருட்களை நன்றாக அரைத்தல், மீன் தீவனம் பிழிந்தெடுக்க பயன்படும் கருவிகள், மிதவை மற்றும் மூழ்கும் மீன் தீவனம் தயாரித்தல், காயவைத்தல், மீன் தீவன தரக்கட்டுப்பாடு, உற்பத்தி செலவின கணக்கீடு ஆகிய தலைப்புகளில் ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்ப வகுப்பு பயிற்சி வழங்கப்பட்டது. 

மேலும், மிதவை மற்றும் மூழ்கும் மீன் தீவனம் தயாரித்தல் குறித்த செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது. இப்பயிற்சியின் நிறைவு விழாவில் மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் பா.சுந்தரமூர்த்தி பயிற்சியில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மேலும், தனது உரையில் இப்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும், பொருளாதாரத்தில் நலிந்த மீனவ சமுதாயத்திற்கு இப்பயிற்சியால் ஏற்படும் மாற்று தொழில்கள் மூலம் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும் என்று எடுத்துரைத்தார். மீன் வளர்ப்பு துறை தலைவர், பேராசிரியர் சா.ஆதித்தன், இப்பயிற்சியை விரிவாக நடத்தினார். 

இப்பயிற்சியைப் பற்றி மேலும் விவரம் தெரிந்து கொள்ள பேராசிரியர் மற்றும் தலைவர்,மீன் வளர்ப்பு துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம, தூத்துக்குடி - 628 008. அலை பேசி எண் (09442288850) மின் அஞ்சல்: [email protected]  மூலம் தொடர்பு கொண்டு பயன் பெறவும் என மீன்வளக்கல்லூரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products

Black Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory