» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தலுக்கு முன் அதிமுக - அமமுக இணையுமா? தூத்துக்குடியில் பரபரப்பு போஸ்டர்!!

வெள்ளி 22, ஜனவரி 2021 5:10:30 PM (IST)அதிமுக - அமமுக இணைய வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் மூத்த வழக்கறிஞர் செங்குட்டுவன் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட கட்சி உட்பூசல்களால் கட்சி இரண்டாக பிரிந்து அமமுக உருவானது. தற்போது அதிமுக ஆட்சி செய்து வந்தாலும் சட்டமன்ற தேர்தலில் சசிகலா விடுதலையாகி வந்தால் இரு கட்சிகளும் இணையும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. வருகிற 27ம் தேதி ஜெயலலிதா மணி மண்டபம் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி தூத்துக்குடியில் அதிமுக - அமமுக இணைய வேண்டும் என அதிமுகவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் செங்குட்டுவன் சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. 

அந்த போஸ்டரில் "சசிகலாவை பீனிக்ஸ் பறவை போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஆகியோரின் படங்களும் இணைந்த கைகள் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து அவர் நமது செய்தியாளரிடம் கூறும்போது, "எம்ஜிஆர் மறைவுக்கு பின் அதிமுக ஜெ. அணி - ஜா. அணி என்று பிரிந்து பின்னர் இணைந்தது. அதுபோல் தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள இந்த பிரிவு தற்காலிகமானது. அமமுக - அதிமுக இணைந்து வரவுள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற வேண்டும்" என்றார். தூத்துக்குடியில் நகரின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் அமமுக- அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest Cakes
Thalir Products
Thoothukudi Business Directory