» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: பிப்ரவரியில் 25ஆம் கட்ட விசாரணை துவக்கம்

வெள்ளி 22, ஜனவரி 2021 4:49:11 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் 25-ஆம் கட்ட விசாரணை பிப்ரவரி மாதம் 15-ம் தேதி தொடங்குகிறது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலைக்கு எதிராக 2018ஆம் ஆண்டு மே மாதம் போராட்டம் நடைபெற்றபோது, காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.  இது தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் நடைபெற்று வருகிறது. இதில் 24 ஆம் கட்ட விசாரணை கடந்த 18ஆம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற்றது. 

இதற்காக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் நடிகர் ரஜினிகாந்த், உள்ளிட்ட 56-பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் மற்ற அனைவரும் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காணொலி காட்சி மூலம் ஆஜராக அனுமதி கோரினார்.  இதுவரை நடந்த விசாரணையில் மொத்தம் 918 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் 616 பேரிடம் நேரில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 25-ஆம் கட்ட விசாரணை பிப்ரவரி மாதம் 15-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரையில் நடைபெற இருப்பதாக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes


Thalir Products

Nalam Pasumaiyagam





Thoothukudi Business Directory