» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்றவருக்கு செல்லாக்காசு பரிசு - கனிமொழி எம்பி குற்றச்சாட்டு

வெள்ளி 22, ஜனவரி 2021 3:55:54 PM (IST)ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவருக்கு செல்லாக்காசு பரிசு கொடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமிஎன்று கனிமொழி எம்பி கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மெயின் பஜாரில் தி.மு.க. சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசியதாதவது: ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவருக்கு செல்லாக்காசு பரிசு கொடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

தகரத்தினை தங்கம் என்று பரிசாக தந்தது போன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னை வெற்றி நடைபோடக் கூடிய தமிழ்நாடு என்று ஏமாற்றி மக்களிடம் விற்று விடாலம் என்று கனவு கண்டு கொண்டு இருக்கிறார். ஆனால் மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. தமிழ்நாட்டில் 23 லட்சம் பேருக்கு வேலை இல்லாமல் தவித்து கொண்டிருக்கின்றனர். தி.மு.க. ஆட்சி வந்தவுடன் மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். நெசவாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்காமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் அது நிறை வேற்றப்படும்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam Pasumaiyagam

Thalir ProductsThoothukudi Business Directory