» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோயிலில் ஜன. 28ல் தைப்பூசத் திருவிழா : அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு

வெள்ளி 22, ஜனவரி 2021 3:42:03 PM (IST)

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூசத்தை முன்னிட்டு வரும் 28-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

இது தொடர்பாக திருக்கோயில் இணை ஆணையர் (பொ) சி.கல்யாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்க்கடவுள் முருகனின் முக்கிய விழாவில் ஒன்றான தைப்பூசத்திருவிழா வரும் 28-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. காலை 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து காலை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 8.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறுகிறது. இந்த ஆண்டு கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு சுவாமி அலைவாயுகந்த பெருமான் எழுந்தருளும் நிகழ்ச்சி திருக்கோயில் உள்பிரகாரத்தில் வைத்து நடைபெறும் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes


Thalir Products

Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory