» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி காவல்துறை அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

வெள்ளி 22, ஜனவரி 2021 3:22:57 PM (IST)தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இன்று (22.01.2021) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், வழக்குகள் சம்மந்தமாக எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியமைக்காக கோவில்பட்டி துணை கண்காணிப்பாளர் கலைக்கதிரவன், தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளர் அருள், முதல் நிலைக் காவலர்  ரஞ்சிதா, கோவில்பட்டி மேற்கு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்  சுகாதேவி, கழுகுமலை காவல் ஆய்வாளர்  கஸ்தூரி, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் சுதேசன், சிறப்பு சார்பு ஆய்வாளர் ஃப்ரெட்ரிக் ராஜன், நாலாட்டின்புதூர் தலைமை காவலர் மணிகண்டன், முதல் நிலைக் காவலர்  பேபி, செய்துங்கநல்லூர் முதல் நிலைக் காவலர் காசி, தட்டார்மடம் தலைமை காவலர் மணிகண்டன், தூத்துக்குடி தென்பாகம் தலைமைக் காவலர்  ஆரோக்கிய மைக்கேல் மெர்சி, முறப்பநாடு தலைமை காவலர்  லலிதா, பசுவந்தனை முதல் நிலைக் காவலர்  பாரதி, சூரங்குடி தலைமை காவலர் சங்கர், திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் தலைமை காவலர் ராம்குமார், ஏரல் காவல் நிலைய தலைமை காவலர்  பிரேமா, மெஞ்ஞானபுரம் முதல் நிலைக் காவலர்  வசந்தி ஆகியோருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு குற்ற வழக்கு தொடர்புத்துறை உதவி இயக்குனர் கண்ணன், தூத்துக்குடி குற்றவியல் நீதித்துரை நடுவர் எண்Iநீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் முருகப்பெருமாள், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் II மற்றும் III ஆகிய நீதிமன்றங்களின் அரசு உதவி வழக்கறிஞர் ஆனந்தன், கோவில்பட்டி குற்றவியல் நீதித்துரை நடுவர் எண் II நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் ஆலன் ராயன், திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துரை நடுவர் நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் முருகேசன், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் ராஜேஷ் கண்ணா ஆகியோரும்,

தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  செல்வன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் கணேஷ், தூத்துக்குடி ஊரகம், பொன்னரசு, ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், கோவில்பட்டி கலைக்கதிரவன், விளாத்திக்குளம் பிரகாஷ், மாவட்ட குற்றப்பிரிவு பெலீக்ஸ் சுரேஷ் பீட்டர், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு பழனிக்குமார், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு இளங்கோவன் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்பட மாவட்டத்தின் அனைத்து காவல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThalir Products

Black Forest CakesNalam Pasumaiyagam
Thoothukudi Business Directory