» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 19 பேருக்கு எஸ்பி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

திங்கள் 18, ஜனவரி 2021 3:46:56 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 19 பேருக்கு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முள்ளக்காடு பகுதியில்சுமார் 160 கிலோ கிராம் எடையுள்ள புகையிலை பொருள்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த வரை கைது செய்து புகையிலை பொருள்களை கைப்பற்றிய முத்தையாபுரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் (பொறுப்பு) பிச்சைபாண்டியன், உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன், காவலர்கள் அமிர்தசெல்வன் மற்றும் ஆறுமுக நயினார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் எதிரிகள் 6 பேரை 24 மணி நேரத்திற்குள் கைது செய்த காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார், தனிப்பிரிவு முதல் நிலைக் காவலர் சுப்பிரமணியன், சாயர்புரம் காவல் நிலையம் தனிப்பிரிவு தலைமைக் காவலர் மைக்கேல்ராஜ பிரதீஸ், முதல் நிலை காவலர் கைலயங்கிரிவாசன், ஏரல் காவல் நிலைய தலைமைக் காவலர் குணசேகரன், காவலர் நாராயணசாமி, குரும்பூர் காவல் நிலைய தலைமைக் காவலர் வெங்கடாசல பெருமாள், செய்துங்கநல்லூர் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் வேம்புராஜ், மற்றும் ஆனந்தராஜ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

விளாத்திகுளம் சத்யா நகரில்சங்கரலிங்கம் என்பவரை கொலை செய்த அவரது மைத்துனர் மாரிமுத்து என்பவரை சில மணி நேரத்திற்குள் கைது செய்த விளாத்திகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் தேவராஜ், (பயிற்சி) ஆதிலிங்கம் மற்றும் காவலர் மகேந்திரன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

தூத்துக்குடிமுத்துகிருஷ்ணா நகர் வாட்டர் டேங்க் அருகில் அரசால் தடைசெய்யப்பட்ட 1.100 கிலோ கிராம் கஞ்சா சைத்திருந்த ஹரிபாலகிருஷ்ணன் என்பவரை கைது செய்த வடாகம் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமைக் காவிலர் பூலையா நாகராஜ், முதல் நிலை காவலர் மாணிக்கராஜ் மற்றும் காவலர் மகாலிங்கம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும், காவல்துறையினர் 19 பேருக்கு அவர்களது சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழச்சியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Thalir Products

Nalam PasumaiyagamThoothukudi Business Directory