» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ரஜினிகாந்த் நாளை ஆஜர்?

திங்கள் 18, ஜனவரி 2021 3:30:55 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையம் முன்பாக நடிகர் ரஜினிகாந்த் நாளை நேரில் ஆஜராவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கினை அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.  

இதனிடையே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் நாளை (ஜனவரி 19ம் தேதி) விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக வேண்டும் என ஒருநபர் ஆணையம் சம்மன் அனுப்பியது. இதையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராவாரா என்பது  குறித்து உறுதியான தகவல் வெளியாக வில்லை. அதே நேரத்தில் ரஜினி சார்பாக அவரது வழக்கறிஞர் நாளை நேரில் ஆஜராகலாம் எனக் கூறப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products

Nalam Pasumaiyagam

Black Forest Cakes








Thoothukudi Business Directory