» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் போகிப் பண்டிகையில் தூய்மை பணி

புதன் 13, ஜனவரி 2021 3:42:52 PM (IST)


கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி சிந்தாமணி நகரில் போகிப் பண்டிகையையொட்டி தூய்மை பணி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவுரையின்படி போகி பண்டிகை நாளான ஜனவரி 13ஆம் தேதி குப்பை சேரும் இடங்களில் தூய்மை பணி மேற்கொண்டு குப்பைகளை பிரித்து அப்புறப்படுத்தவும் மரக்கன்றுகள் நட்டு அப்பகுதியை சுத்தமாக வைத்திருக்கவும் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது.குப்பைகள் அகற்றப்பட்டு குப்பைகளை கொட்டுவோர் மீது அபராதம் விதிக்கும் விளம்பர பதாகை வைக்கப்பட்டது.சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் கோலங்கள் போடப்பட்டது. சிந்தாமணி நகரில்  நடந்த தூய்மைப்படுத்தும் பணிக்கு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார் தலைமை வகித்தார்.

சமூகத் தணிக்கை வட்டார வள அலுவலர் முத்து முருகன் தூய்மை பாரத இயக்க முதன்மை பயிற்றுநர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலுப்பையூரணி பஞ்சாயத்து தலைவி செல்வி சந்தானம் கலந்துகொண்டு மரக்கன்றுகள் நட்டு தூய்மைப்படுத்தும் பணியை துவக்கி வைத்தார். இதில் ஊராட்சி செயலர் ரத்னகுமார்,ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன்,ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு செயற்குழு உறுப்பினர்கள் ரத்தின செல்வி, மகேஸ்வரி, உள்பட மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் தூய்மை காவலர்கள் சுகாதார ஊக்குனர்கள்பலர் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
jesus redeems

Sponsored Ads


Anbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory