» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வெளுத்து வாங்கும் மழை: மக்கள் அவதி ... பொங்கல் விற்பனை கடும் பாதிப்பு!!
புதன் 13, ஜனவரி 2021 3:34:03 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்தது. பின்னர் 1 மணியளவில் திடீரென பலத்த மழை பெய்யத்துவங்கியது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் தூத்துக்குடியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. அடைமழை காரணாக பகல் நேரம் இருள் சூழ்ந்தது. பிரதான சாலைகளில் வாகனங்கள் ஒளி வெளிச்சத்தில் செல்கிறது.
மேலும் பொங்கல் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் இயல்பு வாழ்க்கையை அடியோடு முடக்கி போட்டு உள்ளது. குறிப்பாக பொங்கல் பண்டிகை காலமாக உள்ள நிலையில் லாரிகளில் கொண்டு வரப்பட்டு உள்ள கரும்புகள், பனை ஓலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. தொடர்மழையில், ஏற்கனவே விளைபொருட்கள் சேதம் அடைந்திருக்கும் நிலையில், தற்போது விளைச்சலில் மிச்சம் மீதி மிஞ்சிய விளை பொருட்களை பொங்கல் பண்டிகைக்கு வியாபாரம் செய்ய வந்த விவசாயிகள், வியாபாரிகளுக்கு வேதனையை அளித்துள்ளது கனமழை.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மீன்வளக்கல்லூரியில் மீன் தீவனம் தயாரிப்பு பயிற்சி : ஜனவரி21, 22 ஆகிய நாட்களில் நடக்கிறது
திங்கள் 18, ஜனவரி 2021 8:16:09 PM (IST)

மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கனிமொழி எம்பி பார்வையிட்டார்!
திங்கள் 18, ஜனவரி 2021 3:59:45 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 19 பேருக்கு எஸ்பி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
திங்கள் 18, ஜனவரி 2021 3:46:56 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ரஜினிகாந்த் நாளை ஆஜர்?
திங்கள் 18, ஜனவரி 2021 3:30:55 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்துகள் இல்லா நிலையை உருவாக்க வேண்டும் : ஆட்சியர்
திங்கள் 18, ஜனவரி 2021 3:09:24 PM (IST)

ஜன.21-ல் கனிமொழி எம்பியின் பிரசார பயணம் ரத்து
திங்கள் 18, ஜனவரி 2021 12:31:45 PM (IST)
