» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கரையோர பகுதிகளில் ஆட்சியர் செந்தில் ராஜ் ஆய்வு

புதன் 13, ஜனவரி 2021 3:20:55 PM (IST)


தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கி.செந்தில் ராஜ்,  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோர பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கி.செந்தில் ராஜ்,  இன்று (13.01.2021) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஸ்ரீவைகுண்டம் வட்டம் செங்கராயக்குறிச்சி தனியார் மண்டபத்தில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தாழ்வான பகுதிகளில்; இருந்து அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். மேலும், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும், ஏரல் வட்டம் ஆழ்வார்திருநகரி ஐஸ்வர்யா மகாலில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தாழ்வான பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருக்கும் 35 குடும்பங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். மேலும், ஆழ்வார்திருநகரியில் தாமிபரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகளை பார்வையிட்டார். அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆத்தூர் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் வெள்ளநீர் செல்வதை தடுக்கும் வகையில் ஆக்கிரமித்திருந்த அமலைச்செடிகளை ஆத்தூர் பேரூராட்சி மூலம் அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கொட்டும் மழையில் பார்வையிட்டார்.

தொடர்ந்து புன்னக்காயல் பகுதியில் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் முகத்துவார பகுதியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாயம் தொடர்ந்து அதிகரிக்கும் நிலை உள்ளதால் பொதுமக்கள் ஆறுகளுக்கு செல்லாமல் இருப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், மேலும் தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளை தொடர்ந்து 24 மணி நேரமும் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரோன் ஜீத் சிங் காலோன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, ஏரல் வட்டாட்சியர் இசக்கிராஜ், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறை தொழில்நுட்ப உதவியாளர் பண்டாரம், ஆத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழிசெல்வன்ரெங்கசாமி, முக்கிய பிரமுகர் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
jesus redeems

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory