» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொங்கல் திருநாளை ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுங்கள் : கீதாஜீவன் எம்எல்ஏ

புதன் 13, ஜனவரி 2021 3:12:40 PM (IST)

பொங்கல் திருநாளை சமத்துவ பொங்கலாக ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடிட திமுகவினருக்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளா் கீதாஜீவன் எம்எல்ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழா் திருநாளாம் பொங்கல் திருநாளை சமத்துவ பொங்கலாக கொண்டாடிட கழக தலைவா் மாண்புமிகு தளபதியார் அவா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது வேண்டுகோளுக்கு ஏற்ப தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.கழகத்திற்கு உட்பட்ட அனைத்து நகர, ஒன்றிய, பகுதி, பேரூா், ஊராட்சி மற்றும் வார்டு கழகங்கள் தோறும் சமத்துவ பொங்கல் வைத்தும், கழகத்தின் இருவண்ணக் கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும், கழகத்தின் கொள்கை விளக்கப் பாடல்களை ஒலிபரப்பியும் உற்சாகமாக கொண்டாடிட கழக நிர்வாகிகள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கியும், கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் கேட்டுக்கொள்கிறேன்.தமிழா் திருநாளாம் இப்பொங்கல் திருநாளில் விவசாயிகள், தொழிலாளா்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் வாழ்வில் நலமும் வளமும் காண வேண்டுகிறேன். தமிழகத்தில் தளபதிளார் தலைமையில் விரைவில் தமிழகத்தில் நல்லாட்சி அமைந்து தமிழகம் ஏற்றம் பெறவும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
jesus redeems

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest Cakes


Thoothukudi Business Directory