» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூய்மையான தூத்துக்குடி திட்டம் : அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்தார்

புதன் 13, ஜனவரி 2021 12:25:22 PM (IST)
கோவில்பட்டி நகராட்சியில் தூய்மையான தூத்துக்குடி சிறப்பு தூய்மை பணிகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் தூய்மையான தூத்துக்குடி சிறப்பு தூய்மை பணிகள் துவக்க நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் டாக்டர் கி.செந்தில் ராஜ்,  தலைமையில் இன்று (13.01.2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு சிறப்பு தூய்மை பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலை வகித்தார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்ததாவது: தைத்திருநாளை தமிழர் திருநாளாக ஒட்டுமொத்த தமிழ் இனமே பாரம்பரியமாக கொண்டாடி வருகிறது. தமிழர்களின் பண்பாட்டை, கலாச்சாரத்தை ஒட்டுமொத்த உலகறிய செய்திட தமிழ் திருநாளாம் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முன்னதாக போகி பண்டிகையில் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் வேண்டாத பொருட்களை, வேண்டாதவைகளை அப்புறப்படுத்தி அன்றிலிருந்து புதிய வாழ்க்கை தொடர வேண்டும் என்ற அடிப்படையில் போகி பண்டிகை உள்ளது. பழைய பொருட்களை அப்புறப்படுத்தும் நேரத்தில் அவைகளை சிலர் குப்பைகளில் சேர்ப்பார்கள். சில பேர் தீயிட்டு கொளுத்துவார்கள். அதனால் வரும் புகையின் மூலம் சுற்றுப்புறச்சூழல் மாசு ஏற்படுகின்ற சூழல் ஏற்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை காக்கும் வகையில் தமிழகத்திற்கே முன்னோடியாக தூய்மையான தூத்துக்குடி என்ற பெயரில் நமது மாவட்டத்தில் உள்ள 403 கிராம ஊராட்சி, 19 பேரூராட்சிகள், கோவில்பட்டி, காயல்பட்டிணம் ஆகிய 2 நகராட்சிகள், தூத்துக்குடி மாநகராட்சி ஆகிய ஒட்டுமொத்த தூத்துக்குடி மாவட்டமே ஒரு விழிப்புணர்வாக தமிழகத்திற்கே ஒரு எடுத்துக்காட்டாக தூய்மையான தூத்துக்குடி மூலம் தூய்மை பணிகள் அரசுடன் இணைந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பொதுமக்களுடன் இணைந்து வீடுகள், அலுவலகங்கள், சுற்றுப்புற பகுதிகள், தெரு பகுதிகள் உள்ளிட்டவைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை கோவில்பட்டி நகராட்சியில் அதிகாலையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. வீடுகளில் சேகரிக்கப்படும் கழிவுகள், வீட்டின் முன்பு வைத்து அவைகளை தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வாகனங்கள் மூலம் குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படும். நல்ல நிகழ்வை துவக்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தைப்பொங்கல் வாழ்த்து செய்தியை மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார். மேலும், சமத்துவ பொங்கல் கொண்டாட்டத்தினை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ , மாவட்ட ஆட்சியர் டாக்டர் கி.செந்தில் ராஜ்,  ஆகியோர் துவக்கி வைத்து பங்கேற்றனர்.

கோவில்பட்டி நகராட்சியில் தூய்மையான தூத்துக்குடி சிறப்பு பணிகளுக்காக தூய்மை பணியாளர், நகராட்சி அலுவலக பணியாளர்கள், டெங்கு பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், கே.ஆர். கல்லூரி மாணவ, மாணவியர்கள், லட்சுமியம்மாள் பாலிடெக்னிக் மாணவ, மாணவியர்கள், யோகாலயா யோகா பயிற்சி நிலைய தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு தன்னார்வலர்கள் 1000க்கும் மேற்பட்டோர் மற்றும் நகராட்சி வாகனங்கள் தன்னார்வலர்கள் மூலம் பெறப்பட்ட டிராக்டர்கள், ஜேசிபிக்கள் இப்பணிகள் ஈடுபடுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் கோவில்பட்டி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ்,  கோட்டாட்சியர் விஜயா, நகராட்சி ஆணையர் ராஜாராம், காவல் துணை கண்காணிப்பாளர் கலைக்கதிரவன், வட்டாட்சியர் மணிகண்டன், நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜ், உதவி பொறியாளர் சரவணன், சுகாதார அலுவலர் இளங்கோவன், சுகாதார ஆய்வாளர் சுரேஷ், வேளாண்மை விற்பனைக்குழு உறுப்பினர் அய்யாத்துரை பாண்டியன், அறங்காவலர் குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் அன்புராஜ், ஒன்றிய கவுன்சிலர் கோபி அழகிரி, முக்கிய பிரமுகர்கள் சுப்புராஜ், விஜயபாண்டியன் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

arunJan 13, 2021 - 04:43:11 PM | Posted IP 108.1*****

malaikku pin thoothukudi thoosikudi..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
jesus redeems

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory