» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவல் நிலையங்களில் தூய்மைப் பணி : எஸ்பி நேரில் ஆய்வு

புதன் 13, ஜனவரி 2021 12:18:15 PM (IST)தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகள் சுத்தம் செய்யும் பணிகளை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று போகிப்பபண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், காவலர் குடியிப்புகள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தார். உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் காவலர் குடியிருப்புகள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் தலைமையில் காவலர்கள் இன்று தேவையில்லாதவற்றை கழித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு சுத்தம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பல்வேறு காவல் நிலையங்களுக்கு சென்று காவல் நிலையங்கள் மற்றும் அதன் குடியிருப்புகளை சுத்தமாக வைக்கப்பட்டுள்ளதாக என்பது ஆய்வு செய்து வருகிறார். இன்று காலை தூத்துக்குடி மத்தியபாகம் காவலர் குடியிருப்புகளுக்கு சென்று பார்வையிட்டு, தேவையில்லாதவற்றை அகற்றவும், சுத்தமாக வைக்கவும், காலியாக உள்ள நிலப்பரப்புகளில் மரங்கள் நட்டு வளர்க்கவும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆயவின்போது தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், வடபாகம் காவல் ஆய்வாளர் அருள், மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், தூத்துக்குடி தென்பாகம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பிரேமா உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
jesus redeems

Sponsored Ads

Black Forest CakesAnbu Communications


Thoothukudi Business Directory