» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சென்னை சில்க்ஸ் வணிக வளாகத்திற்கு மீண்டும் சீல் வைப்பு - தூத்துக்குடியில் பரபரப்பு

புதன் 13, ஜனவரி 2021 10:28:04 AM (IST)தூத்துக்குடி மாநகராட்சியில் பெறப்பட்ட அனுமதியை மீறி, கட்டிடங்கள் கட்டப்பட்டது தொடர்பாக சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டது. 

தூத்துக்குடி நகரில் உள்ள விஇ ரோட்டில், சென்னை சில்க்ஸ் நிர்வாகம் சார்பில் 5 மாடி கட்டிடம் கட்டப்பட்டு ஜவுளிக்கடை நகைக்கடை மற்றும் சூப்பர் மார்க்கெட் ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அனுமதிகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும், சூப்பர் மார்க்கெட்டுக்கான கட்டிடம் கட்டுவதற்கு மாநகராட்சியில் அனுமதி பெறவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இதையடுத்த கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை சில்க்ஸ் வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு பின்னர் நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு சென்னை சில்க்ஸ் நிறுவனம் இயங்கி வந்தது. இந்நிலையில் நிபந்தனைகளை நிறைவேற்ற தவறியதால் அந்த வணிக வளாகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை மீண்டும் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர். 

கட்டிட உரிமையாளர் வணிக வளாக கட்டிடத்தை மாற்றியமைக்காத காரணத்திற்காகவும், இடத்தில் செயல்முறைபடுத்தாத காரணத்திற்காகவும் மற்றும் மாறுதல் கட்டுமானத்திற்கு INCDB 2019ன் கட்டிட விதிகளுக்கேற்ப முறைப்படி திட்ட கட்டிட அனுமதி நகர் ஊரமைப்பு துறையில் மற்றும் மாநகராட்சியில் பெற்று சமர்ப்பிக்கப்படாத காரணத்திற்காக தமிழ்நாடு நகர் ஊரடைப்பு சட்டம் 1971 பிரிவுகள் 56(2A) மற்றும் 57(4)ன்படி வணிக வளாக கட்டிட பயன்பாட்டை நிறுத்தம் பொருட்டு சீல்வைக்கப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. 


மக்கள் கருத்து

ப. சுகுமார்Jan 14, 2021 - 07:00:44 PM | Posted IP 108.1*****

நல்ல முடிவு. சட்டத்தை யார் மீறினாலும் அது கண்டிக்கத்தக்கது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கை மற்றவர்களுக்கும் ஒரு பாடம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
jesus redeems

Sponsored Ads
Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory