» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் காமராஜ் மகளிர் கல்லூரி திறப்பு விழா
புதன் 13, ஜனவரி 2021 10:15:20 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நிர்வாகத்தின் கீழ் புதிதாக மகளிர் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. வருகிற ஜுன் முதல் வகுப்புகள் தொடங்குகிறது.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி நிர்வாகத்தின் கீழ் காமராஜ் கலை மற்றும் அறிவியில் கல்லூரி, காமராஜ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகிறது. கல்லூரி வளாகத்தில் தற்போது புதியதாக அரசு அனுமதி பெற்று காமராஜ் பெண்கள் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. வருகிற ஜுன் மாதம் இந்த கல்லூரியின் வகுப்புகள் தொடங்குகிறது. இதனை ஒட்டி கல்லூரி தலைவர் இளங்கோ வெற்றிவேல் ஆலோசனையின் பேரில் புதிய மகளிர் கல்லூரி நுழைவு வாயில் மற்றும் புதிய கட்டடங்கள் திறப்பு விழா கோலாகலமாக நடந்தது.
விழாவின் சிறப்பு விருந்தினராக அகில பாரத விவேகானந்தா கேந்திரா துணைத் தலைவர் மானனீய ஹனுமந்தராவ் திருவிளக்கு ஏற்றி நுழைவு வாயிலை திறந்து வைத்தார். பெண்கள் கல்லூரி தாளாளர் முத்துசெல்வம் வரவேற்றார். காரப்பேட்டை நாடார் மகமைப் செயலாளர் பழரசம் விநாயகமூர்த்தி, காமராஜ் கல்லூரி துணைத்தலைவர் நடராஜன், ஐயப்பன் இயக்குநர் டோனி மெல்வின் கல்லூரி முதல்வர் நாகராஜன் ஆகியோர் பேசினர்.
விழாவின் சிறப்பு விருந்தினர் ஹனுமந்தராவ் பேசியதாவது, இந்த காமராஜ் கல்லூரி வளாகத்தில் பெண்கள் கல்லூரி அமைந்திருப்பது சிறப்பை பெற்றிருக்கிறது. மனிதர்களுக்குள் அற்புத சக்தி உள்ளது. அந்த சக்தியை வெளிக் கொண்டு வருவது தான் கல்வியாகும. அந்த பணியினை இந்த கல்லூரி பேராசிரியர்கள் சிறப்பாக செய்ய வேண்டும். கல்வியில் புரட்சிகரமான மாற்றங்கள் அவசியம் வர வேண்டும். ஒரு அற்புதமான, முக்கியமான, தேவையான கல்வியை காமராஜ் பெண்கள் கல்லூரி கொடுப்பதோடு, சமுதாய கலாச்சார மாற்றத்தை உருவாக்கியும் காட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் தொடர்பு அலுவலரும, பேராசிரியருமான டாக்டர். அசோக் உதவி பேராசிரியர்கள் வான்மதி (வேதியியல்துறை) பூங்கொடி (இயற்பியல் துறை) கார்மெல் சுமித்ரா காமராஜ் மெட்ரிக் பள்ளி முதல்வர், ஆனந்தராஜ் உறுப்பினர் சிவகுமார் மற்றும் பேராசிரியர்கள் பலர் பேசினர். கல்லூரி கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் பேராசிரியர்கள் கல்விக்குழு உறுப்பினர்கள், காரப்பேட்டை நாடார் மகமை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தூத்துக்குடி கல்விக் குழு செயலாளர் பி.எஸ்.பி.கே.ஜெ. சோமு நன்றி கூறினார். முன்னதாக சிறப்பு விருந்தினருக்கு சுபத்ரா வெற்றிவேல் நினைவு பரிசு வழங்கினார்.
மக்கள் கருத்து
K.ganeshan . secretary, Thoothukudi makkal vazhvathara pathukappu sangam.Jan 13, 2021 - 05:44:23 PM | Posted IP 108.1*****
வரவேற்கிறோம்
மேலும் தொடரும் செய்திகள்

மீன்வளக்கல்லூரியில் மீன் தீவனம் தயாரிப்பு பயிற்சி : ஜனவரி21, 22 ஆகிய நாட்களில் நடக்கிறது
திங்கள் 18, ஜனவரி 2021 8:16:09 PM (IST)

மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கனிமொழி எம்பி பார்வையிட்டார்!
திங்கள் 18, ஜனவரி 2021 3:59:45 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 19 பேருக்கு எஸ்பி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
திங்கள் 18, ஜனவரி 2021 3:46:56 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ரஜினிகாந்த் நாளை ஆஜர்?
திங்கள் 18, ஜனவரி 2021 3:30:55 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்துகள் இல்லா நிலையை உருவாக்க வேண்டும் : ஆட்சியர்
திங்கள் 18, ஜனவரி 2021 3:09:24 PM (IST)

ஜன.21-ல் கனிமொழி எம்பியின் பிரசார பயணம் ரத்து
திங்கள் 18, ஜனவரி 2021 12:31:45 PM (IST)

kumarJan 13, 2021 - 07:26:54 PM | Posted IP 173.2*****