» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி விமான நிலையத்தில் விஜய் வசந்துக்கு உற்சாக வரவேற்பு

செவ்வாய் 12, ஜனவரி 2021 5:11:10 PM (IST)தூத்துக்குடி விமான நிலையத்தில்  காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் விஜய் வசந்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் விஜய் வசந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவரை காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

பின்னர் விஜய் வசந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-தேர்தலில் கட்சி மேலிடம் முடிவு செய்தால் போட்டியிடுவேன். மற்றபடி மக்கள் சேவையாற்ற வேண்டும் என்பதே விருப்பம். முதலில் வியாபாரம், பின்பு சினிமா என இருந்தது. சினிமாவுக்கு பொழுதுபோக்காக சென்றேன். ஆனால் தற்போது முழு நேர அரசியலில் மட்டும் ஈடுபட்டு மக்கள் சேவையாற்ற விரும்புகிறேன். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகை தராதது தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு பலம்தான்.

தற்போது காங்கிரஸ் கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தேர்தலில் அ.தி.மு.க.வின் மீதுள்ள அதிருப்தி, காங்கிரஸ் கூட்டணி கட்சி வெற்றிக்கு வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் எம்.எஸ். காமராஜ்,  ஜெயகொடி, தங்கராஜ், ஜாண் வெஸ்லி, அருணாசலம், செந்தூர்பாண்டி, பொன்பாண்டியன், மார்க்ஸ், பிரபாகர், கிருஷ்ணன், விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
jesus redeems

Sponsored Ads


Anbu Communications


Black Forest Cakes


Thoothukudi Business Directory