» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மக்களின் குறைகளை தெரிவிக்க செயலி உருவாக்க வேண்டும் - எம்பவர் கோரிக்கை!!

செவ்வாய் 12, ஜனவரி 2021 10:40:05 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்களின் குறைகளை தெரிவிப்பதற்கு செயலி உருவாக்கம் செய்ய வேண்டும் என எம்பவர் இந்தியா வலியுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு, எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி & சுற்றுச்சூழல் மற்றும் ஆராய்ச்சி நடுவம் செயல் இயக்குநர் ஆ. சங்கர் அனுப்பியுள்ள மனு: தூத்துக்குடி மாநகராட்சியில் பொதுமக்களின் குறைகளை தெரிவிப்பதற்கு வாட்ஸ் அப் செயலி உருவாக்கம் செய்ய வேண்டும். இந்த செயலி உருவாக்கப்பட்டால் பொதுமக்கள் எரியாத தெரு விளக்கு, சேதமடைந்த சாலைகள் போன்ற தூத்துக்குடி மாநகராட்சி சம்மந்தமான பிரச்சினைகளை உடனுக்குடன் தெரிவிப்பதற்கு வசதியாக இருக்கும். 

ஏற்கனவே இதுகுறித்து 28.12.2020 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இத்திட்டத்தை செயல்படுத்திட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே தாங்கள் இவ்விஷயத்தில் நேரிடையாக தலையிட்டு மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 


மக்கள் கருத்து

KaruppasamyJan 14, 2021 - 03:42:11 PM | Posted IP 108.1*****

Whatter over

அன்புJan 14, 2021 - 02:44:10 PM | Posted IP 162.1*****

ஏற்கனவே இருக்கிறது...செயல்பாடு தான் எப்படியோ

P.ஆஸ்வால்ட்Jan 12, 2021 - 11:44:07 PM | Posted IP 162.1*****

100% இது தேவை.நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மக்கள் நலன் கருதி வாட்ஸப் செயலி உருவாக்கினால் மிகவும் நலனாக இருக்கும்.

P.ஆஸ்வால்ட்Jan 12, 2021 - 11:44:04 PM | Posted IP 108.1*****

100% இது தேவை.நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மக்கள் நலன் கருதி வாட்ஸப் செயலி உருவாக்கினால் மிகவும் நலனாக இருக்கும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
jesus redeems

Sponsored Ads


Anbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory