» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மடிக்கணினி வழங்க கோரி மாணவ, மாணவிகள் முற்றுகை : ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
திங்கள் 11, ஜனவரி 2021 12:13:58 PM (IST)

தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்க வலியுறுத்தி மாணவ, மாணவிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
2017-2018 கல்வியாண்டில் பிளஸ் 2 பயின்ற மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் பி.ஜாய்சன் தலைமையில் மாணவ, மாணவிகள் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில், தமிழக அரசின் சார்பாக வருடம் தோறும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படுகிறது.
ஆனால் 2017-2018 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு தற்போது வரை மடிக்கணினி வழங்கப்படவில்லை. ஆனால் 2018-2019 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே 2017-2018 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்க மாவடட் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவ, மாணவியர்களின் முற்றுகையால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மீன்வளக்கல்லூரியில் மீன் தீவனம் தயாரிப்பு பயிற்சி : ஜனவரி21, 22 ஆகிய நாட்களில் நடக்கிறது
திங்கள் 18, ஜனவரி 2021 8:16:09 PM (IST)

மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கனிமொழி எம்பி பார்வையிட்டார்!
திங்கள் 18, ஜனவரி 2021 3:59:45 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 19 பேருக்கு எஸ்பி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
திங்கள் 18, ஜனவரி 2021 3:46:56 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ரஜினிகாந்த் நாளை ஆஜர்?
திங்கள் 18, ஜனவரி 2021 3:30:55 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்துகள் இல்லா நிலையை உருவாக்க வேண்டும் : ஆட்சியர்
திங்கள் 18, ஜனவரி 2021 3:09:24 PM (IST)

ஜன.21-ல் கனிமொழி எம்பியின் பிரசார பயணம் ரத்து
திங்கள் 18, ஜனவரி 2021 12:31:45 PM (IST)

thevai illatha arppattamJan 11, 2021 - 01:38:04 PM | Posted IP 108.1*****