» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெளிமாநிலங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சனி 26, டிசம்பர் 2020 4:44:21 PM (IST)

தென் தமிழகத்தில் இருந்து  வெளிமாநில ரயில் நிலையங்களுக்கு செல்லும் சிறப்பு ரயில்களின்  சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு : கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென் தமிழக மாவட்டங்களில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களின் சேவை மாதம் மாதம் நீட்டிப்பு செய்யப்படுகிறது. சில சிறப்பு ரயில்கள் டிசம்பர் மாத இறுதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த ரயில்களின் சேவை ஜனவரி மாதம் முழுவதும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் வண்டி எண் 06352 நாகர்கோவில் - மும்பை சிறப்பு ரயில் 03.01.2021 முதல் 31.01.2021 வரையும், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மும்பையில் இருந்து புறப்படும் வண்டி எண் 06351 மும்பை - நாகர்கோவில் சிறப்பு ரயில் 04.01.2021 முதல் 01.02.2021வரையும், வியாழக்கிழமைகளில் மதுரையிலிருந்து புறப்படும் வண்டி எண் 06053 மதுரை - பிகானேர் வாராந்திர சிறப்பு ரயில் 07.01.2021 முதல் 28.01.2021 வரையும், 

ஞாயிற்றுக்கிழமைகளில் பிகானேரிலிருந்து புறப்படும் வண்டி எண் 06054 பிகானேர் - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் 10.01.2021 முதல் 31.01.2021 வரையும், வெள்ளிக்கிழமைகளில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் வண்டி எண் 06733 ராமேஸ்வரம் - ஓகா வாராந்திர சிறப்பு ரயில் 01.01.2021  முதல் 29.01.2021 வரையும், செவ்வாய்க்கிழமைகளில் ஓகாவில் இருந்து புறப்படும் வண்டி எண் 06734 ஓகா - ராமேஸ்வரம்  வாராந்திர சிறப்பு ரயில் 05.01.2021 முதல் 02.02.2021 வரையும், 

ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் வண்டி எண் 06070 திருநெல்வேலி -  பிலாஸ்பூர் வாராந்திர சிறப்பு ரயில் 03.01.2021 முதல் 31.01.2021 வரையும், செவ்வாய்க்கிழமைகளில் பிலாஸ்பூரில் இருந்து புறப்படும் வண்டி எண் 06069 பிலாஸ்பூர் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் 05.01.2021 முதல் 02.02.2021 வரையும், புதன்கிழமைகளில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும் வண்டி எண் 06072 திருநெல்வேலி -  மும்பை தாதர் வாராந்திர சிறப்பு ரயில் 06.01.2021 முதல் 27.01.2021 வரையும், 

வியாழக்கிழமை மும்பை தாதரில்  இருந்து புறப்படும் வண்டி எண் 06071 தாதர் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் 07.01.2021 முதல் 28.01.2021 வரையும் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் 04.01.2021 முதல் 25.01.2021 வரை வண்டி எண் 09424 காந்திதாம் - திருநெல்வேலி வாராந்திர பண்டிகை கால சிறப்பு ரயில் காந்திதாமிலிருந்து  திங்கட்கிழமைகளில் அதிகாலை 04.40 மணிக்கு புறப்பட்டு  செவ்வாய்க்கிழமைகளில் இரவு 11.35 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். 

மறுமார்க்கத்தில் 07.01.2021 முதல் 28.01.2021 வரை வண்டி எண் 09423 திருநெல்வேலி - காந்திதாம் வாராந்திர பண்டிகை கால சிறப்பு ரயில் வியாழக்கிழமைகளில் காலை 07.40 மணிக்கு  புறப்பட்டு சனிக்கிழமைகளில் அதிகாலை 02.35 மணிக்கு காந்திதாம் சென்று சேரும். ரயில்கள் அகமதாபாத், வதோதரா, சூரத், வாசை ரோடு, பன்வெல், ரத்தினகிரி, மட்கான், கார்வார், மங்களூர், கோழிக்கோடு, ஷோரனூர், திருச்சூர், எர்ணாகுளம், காயங்குளம்,  திருவனந்தபுரம், நாகர்கோவில் டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம். இவ்வாறு தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
jesus redeems

Sponsored AdsBlack Forest CakesAnbu Communications
Thoothukudi Business Directory