» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடிக்க கூடாது : ஆட்சியர் அறிவுறுத்தல்

சனி 26, டிசம்பர் 2020 3:19:21 PM (IST)

தூத்துக்குடி மீனவர்கள் இந்திய கடல் எல்லையை கடந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையை கடந்து மீன்பிடி தொழில் புரிவதனால் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும், துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாவதுமான நிலை ஏற்படுகிறது. 

தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இந்திய கடல் எல்லை கடந்து மீன்பிடி தொழில் புரியும் போது சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டு, சமூக விரோதிகள் தப்பிக்கும் வாய்ப்பு உருவாகிறது. கடல் எல்லை கடந்து மீன்பிடி மேற்கொள்ளும் போது இந்திய - இலங்கை கடல் எல்லையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உருவாகிறது. எனவே, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இந்திய கடல் எல்லையை கடந்து மீன்பிடி தொழிலில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. 

மேலும், அதனை மீறி மீன்பிடி தொழில் மேற்கொள்ளும் படகுகளுக்கு முதல் மூன்று முறை அபராதம் விதிக்கப்படும் (ரூ.1,000/-, ரூ.2,500/-, ரூ.5,000/-) நான்காவது முறை எல்லை கடந்து மீன்பிடி மேற்கொள்ளும் போது ஒரு வார காலத்திற்கு மீன்பிடி தொழில் புரிய தடைவிதிக்கப்படும். நான்கு முறைகளுக்கு மேல் எல்லை கடந்து மீன்பிடி மேற்கொள்ளும் போது படகு உரிமம் இரத்து செய்யப்பட்டு, தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் கி.செந்தில் ராஜ்,  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

சொல்வதெல்லாம் உண்மைDec 26, 2020 - 05:53:10 PM | Posted IP 173.2*****

சில மீனவர்கள் காசுக்காக எல்லை வரை மீன்பிடிப்பார்கள் , (பேராசை) காசுக்காக சீபுட் கம்பெனிகளில் சுத்தமான பெரிய மீன்கள் விற்றுவிடுவார்கள் , மக்களுக்கோ 2 அல்லது 3 நாட்களில் பதப்படுத்த, அழுகிப்போன மீன்கள் தான் கொடுப்பாங்க , ஆனால் விலையோ பெட்ரோல் ரேட் க்குமேல விற்பார்கள், அந்த காலத்தில் பதப்படுத்தாத சுத்தமான சாலமீன்கள் கிடைக்கும் ருசி நிறைந்தவை , இந்தக்காலத்தில் ருசியோ இல்லை எல்லாமே பதப்படுத்த மீன்கள் ...

ராஜாDec 26, 2020 - 04:28:23 PM | Posted IP 162.1*****

சுனாமி நினைவு நாளில் தரமான அறிவிப்பு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
jesus redeems

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory