» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்டெர்லைட் போராட்டம்: திருமுருகன் காந்தி உள்ளிட்ட 18 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
புதன் 23, டிசம்பர் 2020 11:49:56 AM (IST)
ஸ்டெர்லைட் ஆலக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக, திருமுருகன் காந்தி, பாத்திமா பாபு உள்ளிட்ட 18 பேர் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
தூத்துக்குடியைடுத்த குமரெட்டியபுரம் கிராமத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தொடர்ந்து 100 நாள்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை தொடர்ந்து 2018 மார்ச் 3 இல், மே17 இயக்க நிறுவனர் திருமுருகன் காந்தி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு ஆகியோர் கிராம மக்களை சந்திக்க சென்றார்களாம்.
இதையடுத்து தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய காவலர்கள் எவ்வித முன் அனுமதி இன்றி தடையை மீறி சென்றதாக 2018 மார்ச் 4 ஆம் தேதி திருமுருகன் காந்தி,பாத்திமா பாபு உள்பட 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை 2019 ஜுலை 16 இல் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றம் எண் 1 இல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்காக திருமுருகன் காந்தி, பாத்திமா பாபு உள்பட 18 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மீன்வளக்கல்லூரியில் மீன் தீவனம் தயாரிப்பு பயிற்சி : ஜனவரி21, 22 ஆகிய நாட்களில் நடக்கிறது
திங்கள் 18, ஜனவரி 2021 8:16:09 PM (IST)

மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கனிமொழி எம்பி பார்வையிட்டார்!
திங்கள் 18, ஜனவரி 2021 3:59:45 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 19 பேருக்கு எஸ்பி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
திங்கள் 18, ஜனவரி 2021 3:46:56 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ரஜினிகாந்த் நாளை ஆஜர்?
திங்கள் 18, ஜனவரி 2021 3:30:55 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்துகள் இல்லா நிலையை உருவாக்க வேண்டும் : ஆட்சியர்
திங்கள் 18, ஜனவரி 2021 3:09:24 PM (IST)

ஜன.21-ல் கனிமொழி எம்பியின் பிரசார பயணம் ரத்து
திங்கள் 18, ஜனவரி 2021 12:31:45 PM (IST)
