» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு : கால அட்டவணையில் மாற்றம்
திங்கள் 21, டிசம்பர் 2020 4:58:04 PM (IST)
தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயில் சேவை ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

23.12.2020 முதல் மைசூர் - தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயில்களில் கால அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வண்டி எண் 06236 மைசூர் - தூத்துக்குடி சிறப்பு ரயில் திண்டுக்கல்லில் இருந்து காலை 06:30 மணிக்கு பதிலாக காலை 06.35 மணிக்கும், மதுரையிலிருந்து காலை 07:35 மணிக்கு பதிலாக காலை 07.50 மணிக்கும், விருதுநகரிலிருந்து காலை 08.25 மணிக்கு பதிலாக காலை 08.40 மணிக்கும், கோவில்பட்டியிலிருந்து காலை 09:10 மணிக்கு பதிலாக காலை 09.25 மணிக்கும், வாஞ்சி மணியாச்சியிலிருந்து காலை 10.05 மணிக்கு பதிலாக காலை 10.00 மணிக்கும் புறப்பட்டு முற்பகல் 11.15 மணிக்கு பதிலாக முற்பகல் 11.10 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் வண்டி எண் 06235 தூத்துக்குடி - மைசூர் சிறப்பு ரயில் தூத்துக்குடியில் இருந்து மாலை 04.25 மணிக்கு பதிலாக மாலை 04.30 மணிக்கும், வாஞ்சி மணியாச்சியில் இருந்து மாலை 05.07 மணிக்கு பதிலாக மாலை 05.02 மணிக்கும், கோவில்பட்டியிலிருந்து மாலை 05.45 மணிக்கு பதிலாக மாலை 05.35 மணிக்கும், விருதுநகரிலிருந்து மாலை 06.30 மணிக்கு பதிலாக மாலை 06.35 மணிக்கும், மதுரையிலிருந்து இரவு 07.45 மணிக்கு பதிலாக 07.50 மணிக்கு புறப்பட்டு, பின்பு திண்டுக்கல்லில் இருந்து இரவு 09.15 மணிக்கு பதிலாக இரவு 09.10 மணிக்கு புறப்படும்" என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மீன்வளக்கல்லூரியில் மீன் தீவனம் தயாரிப்பு பயிற்சி : ஜனவரி21, 22 ஆகிய நாட்களில் நடக்கிறது
திங்கள் 18, ஜனவரி 2021 8:16:09 PM (IST)

மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கனிமொழி எம்பி பார்வையிட்டார்!
திங்கள் 18, ஜனவரி 2021 3:59:45 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 19 பேருக்கு எஸ்பி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
திங்கள் 18, ஜனவரி 2021 3:46:56 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ரஜினிகாந்த் நாளை ஆஜர்?
திங்கள் 18, ஜனவரி 2021 3:30:55 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்துகள் இல்லா நிலையை உருவாக்க வேண்டும் : ஆட்சியர்
திங்கள் 18, ஜனவரி 2021 3:09:24 PM (IST)

ஜன.21-ல் கனிமொழி எம்பியின் பிரசார பயணம் ரத்து
திங்கள் 18, ஜனவரி 2021 12:31:45 PM (IST)

ராஜாDec 22, 2020 - 05:19:47 PM | Posted IP 173.2*****