» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மனைவி, மகளை கொன்றவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை : மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

செவ்வாய் 1, டிசம்பர் 2020 3:42:50 PM (IST)

தூத்துக்குடியில் மனைவி, மகளை கொலை செய்தவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தூத்துக்குடி மடத்தூர் மெயின் ரோடு பி அன் டி காலனியைச் சேர்ந்த சிவதாணு மகன் சங்கர் (42) என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 29.05.2014 அன்று தனது மனைவி கோகிலா (26) மற்றும் மகள் புவனா என்ற அட்சயா (3) ஆகியோரை கொலை செய்துள்ளார். இது குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர். இவ்வழக்கை சிப்காட் காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர் புலன் விசாரணை செய்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கு தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டியராஜன், சங்கருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 2ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த  ஆய்வாளர் பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர் (தற்போது தூத்துக்குடி மாவட்ட குற்ற பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்) இவ்வழக்கின் சாட்சிகளை ஆஜர்படுத்தி எதிரிக்கு தண்டணை வாங்கி கொடுக்க ஆவண செய்த தற்போதைய சிப்காட்  காவல் நிலைய ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமைக் காவலர் இளமதி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
jesus redeems

Sponsored Ads
Black Forest Cakes

Anbu Communications

Thoothukudi Business Directory