» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் காவல்துறை ஆய்வுக்கூட்டம்: டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு தலைமையில் நடைபெற்றது

வெள்ளி 27, நவம்பர் 2020 4:55:53 PM (IST)தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவீன்குமார் அபிநபு, தலைமையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் முன்னிலையில் இன்று (27.11.2020) நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், வழக்குகள் சம்மந்தமாக எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்காக திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவீன்குமார் அபிநபு, தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ், தாளமுத்துநகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜெயந்தி, ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துலெட்சுமி, கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஹரிக்கண்ணன், கோவில்பட்டி கிழக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர் நாராயணசாமி, கோவில்பட்டி போக்குவரத்துப்பிரிவு தலைமை காவலர் முருகன், மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவலர் ஸ்ரீராம் ஆகியோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு குற்ற வழக்கு தொடர்புத்துறை உதவி இயக்குனர் கண்ணன், தூத்துக்குடி குற்றவியல் நீதித்துரை நடுவர் எண் I நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் முருகப்பெருமாள், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் II மற்றும் III ஆகிய நீதிமன்றங்களின் அரசு உதவி வழக்கறிஞர் ஆனந்தன், கோவில்பட்டி குற்றவியல் நீதித்துரை நடுவர் எண் II நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் ஆலன் ராயன், திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துரை நடுவர் நீதிமன்றத்தின் அரசு உதவி வழக்கறிஞர் முருகேசன், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் ராஜேஷ் கண்ணா ஆகியோரும்,

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி நகரம் துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ், திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இ.கா.ப, ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், கோவில்பட்டி கலைக்கதிரவன், மணியாச்சி சங்கர்;, மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் விளாத்திக்குளம் பொறுப்பு பெலீக்ஸ் சுரேஷ் பீட்டர், பயிற்சி காவல் துணை காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்பட மாவட்டத்தின் அனைத்து காவல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsBlack Forest Cakes
Anbu CommunicationsThoothukudi Business Directory