» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கைதுக்கு முன்னும் பின்னும் நீதிக்கான அணுகுமுறை : காவல்துறையினருக்கு நீதிபதி பயிற்சி
வெள்ளி 27, நவம்பர் 2020 3:56:26 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு ‘கைதுக்கு முன்னும், கைது மற்றும் காவல் அடைப்பு நிலையில் நீதிக்கான அணுகுமுறை” குறித்து தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் மூத்த உரிமையியல் நீதிபதி கனம் ஆர் சாமுவேல் பெஞ்சமின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு பயிற்சி வழங்கினார்
இன்று (27.11.2020) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் மூத்த உரிமையியல் நீதிபதி கனம் ஆர் சாமுவேல் பெஞ்சமின் தூத்துக்குடி மாவட்ட காவல் காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு ‘கைதுக்கு முன்னும், கைது மற்றும் காவல் அடைப்பு நிலையில் நீதிக்கான அணுகுமுறை” (Early Access to Justice at Pre-arrest, Arrest and remand stage) குறித்து பயிற்சி வழங்கினார்.
இப்பயிற்சியில் ஒருவரை காவல்துறை அதிகாரி சந்தேகத்தின்பேரில் விசாரிக்கும்போதும், கைது செய்து காவல் அடைப்பு செய்தும் நிலையிலும் அவருக்கு என்னென்ன உரிமைகள் உள்ளது என்றும் கைது செய்யும் காவல்துறை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளில் காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள், அவர்களுக்குரிய அதிகாரஙகள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான உரிமைகள் பற்றி குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காண்பித்து சிறப்பான பயிற்சி வழங்கினார்.
இப்பயிற்சியில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி கணேஷ், ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், விளாத்திக்குளம் பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர், மணியாச்சி சங்கர், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு பழனிக்குமார், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்பட காவல் ஆய்வாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி உரக்கிடங்கு பகுதியில் அடர் காடுகள் வளர்ப்பு திட்டம்: மாநகராட்சி அனுமதி!!
வெள்ளி 22, ஜனவரி 2021 9:37:53 PM (IST)

மீன்வளக்கல்லூரியில் மீன் தீவனம் தயாரித்தல் குறித்த பயிற்சி
வெள்ளி 22, ஜனவரி 2021 5:25:36 PM (IST)

தேர்தலுக்கு முன் அதிமுக - அமமுக இணையுமா? தூத்துக்குடியில் பரபரப்பு போஸ்டர்!!
வெள்ளி 22, ஜனவரி 2021 5:10:30 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: பிப்ரவரியில் 25ஆம் கட்ட விசாரணை துவக்கம்
வெள்ளி 22, ஜனவரி 2021 4:49:11 PM (IST)

ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்றவருக்கு செல்லாக்காசு பரிசு - கனிமொழி எம்பி குற்றச்சாட்டு
வெள்ளி 22, ஜனவரி 2021 3:55:54 PM (IST)

திருச்செந்தூர் கோயிலில் ஜன. 28ல் தைப்பூசத் திருவிழா : அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு
வெள்ளி 22, ஜனவரி 2021 3:42:03 PM (IST)
