» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்கள் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்
வெள்ளி 27, நவம்பர் 2020 3:08:10 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்கள் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் டாக்டர் கி.செந்தில் ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வழியாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களின் பொருளாதாரம் மேம்பாடு அடையும் பொருட்டு மோட்டார் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரம் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்களுக்கும் வழங்கப்படுகிறது.
விருப்பமுள்ள 18 வயதிற்கு மேல் 45 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், தையல் பயின்ற சான்று மற்றும் புகைப்படம் (2) ஆகியவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலக தொலைபேசி எண்:0461-2340626-ல் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் கி.செந்தில் ராஜ், தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி உரக்கிடங்கு பகுதியில் அடர் காடுகள் வளர்ப்பு திட்டம்: மாநகராட்சி அனுமதி!!
வெள்ளி 22, ஜனவரி 2021 9:37:53 PM (IST)

மீன்வளக்கல்லூரியில் மீன் தீவனம் தயாரித்தல் குறித்த பயிற்சி
வெள்ளி 22, ஜனவரி 2021 5:25:36 PM (IST)

தேர்தலுக்கு முன் அதிமுக - அமமுக இணையுமா? தூத்துக்குடியில் பரபரப்பு போஸ்டர்!!
வெள்ளி 22, ஜனவரி 2021 5:10:30 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: பிப்ரவரியில் 25ஆம் கட்ட விசாரணை துவக்கம்
வெள்ளி 22, ஜனவரி 2021 4:49:11 PM (IST)

ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்றவருக்கு செல்லாக்காசு பரிசு - கனிமொழி எம்பி குற்றச்சாட்டு
வெள்ளி 22, ஜனவரி 2021 3:55:54 PM (IST)

திருச்செந்தூர் கோயிலில் ஜன. 28ல் தைப்பூசத் திருவிழா : அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு
வெள்ளி 22, ஜனவரி 2021 3:42:03 PM (IST)
